LATEST NEWS
அப்படிப்போடு…! மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்..! பட்ஜெட்டில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு..!
மகளிர் மேம்பாட்டிற்காக ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்’ பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு 100% மானியத்தில் இலவசமாக 5 ஆடுகள் வழங்கப்படும். இதன் மூலம் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 30,000 பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சிறப்புத் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமுதாயத்தில் விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் சுயசார்பை உறுதி செய்வதை இத்திட்டம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
