BREAKING: மீனவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. இனி ரூ.6,000 இல்லை… இனி ரூ.7,000.. பட்ஜெட்டில் வெளியான மாஸ் அறிவிப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: மீனவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. இனி ரூ.6,000 இல்லை… இனி ரூ.7,000.. பட்ஜெட்டில் வெளியான மாஸ் அறிவிப்பு…!!

Published

on

மாநில பட்ஜெட்டில் மீனவர் சமூகத்தின் நலனை மேம்படுத்தும் வகையில், மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவித்தொகை ரூ.6,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அரசின் இந்த உதவித்தொகை உயர்வு அறிவிப்பின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.93 லட்சம் மீனவ குடும்பங்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்காக அரசு சார்பில் ₹135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீனவர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்கும் மீனவர்களுக்குத் தேவையான நிதியுதவி மற்றும் வட்டி மானியம் வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய நிதியுதவி மற்றும் கடன் வட்டி மானிய நடவடிக்கைகள், ஆழ்கடல் மீன்பிடிப்பை மேம்படுத்துவதோடு மீனவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் பெரிதும் உதவும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in