“அப்படிப்போடு..! பதக்கம் வென்ற சிங்கங்களுக்கு… CM விஜய் கொடுத்த ரூ.80 லட்சம் சர்ப்ரைஸ்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்படிப்போடு..! பதக்கம் வென்ற சிங்கங்களுக்கு… CM விஜய் கொடுத்த ரூ.80 லட்சம் சர்ப்ரைஸ்..!!”

Published

on

காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ரூ.80 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை தேடித்தந்த வீரர்களின் திறமையைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளு தூக்குதல் வீரர் ராஜா முத்துப் பாண்டி மற்றும் ட்ரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் ஆகிய இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற செல்வ பிரபுவிற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. இந்த தொகைகளுக்கான காசோலைகளை முதலமைச்சர் நேரடியாகவே அவர்களுக்கு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in