பரபரப்பு.! அன்பில் மகேஸை ஓரங்கட்டும் திமுக தலைமை..? மகனுக்காக கே.என் நேரு நடத்திய மாஸ்டர் பிளான்.. திருச்சி திமுக கோட்டையில் வெடித்த கோஷ்டிப் பூசல்.. ஆதரவாளர்கள் கடும் குமுறல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பரபரப்பு.! அன்பில் மகேஸை ஓரங்கட்டும் திமுக தலைமை..? மகனுக்காக கே.என் நேரு நடத்திய மாஸ்டர் பிளான்.. திருச்சி திமுக கோட்டையில் வெடித்த கோஷ்டிப் பூசல்.. ஆதரவாளர்கள் கடும் குமுறல்..!!

Published

on

திருச்சி மாவட்ட திமுக அரசியலில் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த குமுறல் எழுந்துள்ளது. மாவட்ட அரசியலில் இருந்து கே.என். நேரு சற்று விலகியிருந்தாலும், தனது மகனின் அரசியல் எதிர்காலத்திற்காக திருச்சி நகரின் 3 முக்கிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் (மா.செ.) பொறுப்பை அவர் கட்சித் தலைமையிடம் போராடிப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திருச்சி திமுகவினர் இடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதற்கு நேர்மாறாக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெறும் 2 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே உள்ளடக்கிய மா.செ. பொறுப்பு மட்டுமே வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மறைந்த அன்பில் பொய்யாமொழியின் குடும்பத்திற்குத் திருச்சியில் இருக்கும் பாரம்பரிய செல்வாக்கைக் காட்டிலும், நேருவின் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது அன்பில் மகேஸின் ஆதரவாளர்களைக் கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மாவட்ட எல்லைப் பிரிப்பு மற்றும் பொறுப்புகள் ஒதுக்கீட்டில் நிலவும் இந்த அதிருப்தி, திருச்சி திமுக கோட்டையினுள் தற்போது புகைச்சலையும் கோஷ்டிப் பூசலையும் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in