LATEST NEWS
OMG: “40 பனிப்பாறை ஏரிகள் வெடிக்கும் அபாயம்” நேபாளப் பேரழிவைத் தொடர்ந்து இங்கேயும் ரெட் அலர்ட்… நீர்மட்டத்தைக் குறைக்க அரசு அதிரடி நடவடிக்கை.. பீதியில் மக்கள்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள பனிப்பாறை ஏரிகள் அடுத்த பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. சிக்கிமில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ள நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) அங்குள்ள 40 ஏரிகள் அபாயக் கட்டத்தில் இருப்பதாகவும், அதில் 16 ஏரிகள் அதிக ஆபத்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
இந்த 16 ஏரிகளில் பெரும்பாலானவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளன. தற்போது இந்த ஏரிகளின் ஆழம், நீரின் அளவு, பனிப்பாறைகளின் தன்மை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயங்கள் குறித்து தீவிர அறிவியல் பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக, இந்த ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைத்து ஆபத்தைக் கட்டுப்படுத்த சிக்கிம் மாநில அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான நிலையில் உள்ள 16 ஏரிகளிலும் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் சென்சார் கருவிகள் மற்றும் தானியங்கி கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவைத் தூண்டக்கூடிய வானிலை மாற்றங்களை உடனுக்குடன் துல்லியமாகக் கண்காணிப்பதற்காக, அங்கு புதிய டாப்ளர் வானிலை ரேடார்களை (Doppler Weather Radars) நிறுவுவதற்கான இடங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
