“என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மாபெரும் சக்தி இவர்கள்தான்..!” உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய முதல்வர் விஜய்.. சட்டசபையை நெகிழவைத்த சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மாபெரும் சக்தி இவர்கள்தான்..!” உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய முதல்வர் விஜய்.. சட்டசபையை நெகிழவைத்த சம்பவம்..!!

Published

on

நடிகர் விஜய் ‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் நடித்த காலத்திலிருந்தே அவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர். தொடர்ந்து அவர் நடித்த காதல் திரைப்படங்கள், பெண் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்தின. ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டுப் பெண்கள் விஜயை வெறும் திரையுலக நட்சத்திரமாகப் பார்க்காமல், தங்களது சொந்த வீட்டின் மகனாகவும் சகோதரனாகவும் நேசிக்கத் தொடங்கினர். பெண்களின் இந்த மாறாத அன்பும் ஆதரவுமே, அவர் அரசியல் களம் புகுந்து தமிழக வெற்றி க்ழகம் கட்சியைத் தொடங்கியபோது, சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி மாபெரும் வாக்கு வங்கியையும் வெற்றியையும் பெற முதன்மையான காரணமாக அமைந்தது.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது பேசிய தமிழக வெற்றி கழகத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜோசப் விஜய், பெண்களின் பங்களிப்பைக் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். “தமிழகத்தில் உள்ள பெண்களுக்காக நான் பேசுகிறேன்; இங்கு ஏராளமான பெண் ஆளுமைகள் உள்ளனர். எனது இன்றைய நிலைக்குத் தமிழ்நாட்டின் அம்மாக்கள், அக்காக்கள், தங்கைகள் மற்றும் பாட்டிகள்தான் முக்கியக் காரணம். பெண்களுக்குச் சமூகத்தில் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். 2026 சட்டமன்றத்தில் 23 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். திரையுலகில் இந்த விஜய்க்கு கிடைத்த இடத்திற்கும், இப்போது அரசியலில் கிடைத்துள்ள இந்த இடத்திற்கும் எனது தாய்மார்களும் சகோதரிகளுமே மிக முக்கியக் காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in