BREAKING: CM விஜய் புதிய வரலாறு படைத்தார்.. அரசு அதிகாரிகளின் நீண்ட நாள் வேதனைக்கு அதிரடித் தீர்வு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: CM விஜய் புதிய வரலாறு படைத்தார்.. அரசு அதிகாரிகளின் நீண்ட நாள் வேதனைக்கு அதிரடித் தீர்வு..!!

Published

on

VVIP மற்றும் முக்கிய பிரமுகர்களின் மாவட்ட வருகையின்போது ஏற்படும் செலவினங்களை மேற்கொள்வதற்காக ரூ.6.85 கோடி நிதியை முன்கூட்டியே ஒதுக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அவர்களின் தேவைகளுக்கேற்ப தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிதி கிடைக்கப்பெறும். இத்தொகை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

இதுநாள் வரை முக்கியஸ்தர்கள் வருகையின் போது அமைக்கப்படும் பந்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கான தொகை அரசு தரப்பில் கிடைக்கக் காலதாமதமானது. இதனால் மாவட்ட அதிகாரிகள் தங்களின் சொந்தப் பணத்தைச் செலவு செய்துவிட்டு, பின்னர் அந்த நிதியைத் திரும்பப் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய வேதனையான சூழல் நிலவி வந்தது. தற்போது அரசு முன்கூட்டியே நிதியை விடுவித்துள்ளதால், அதிகாரிகளின் நீண்ட நாள் சுமை குறைந்துள்ளதோடு, அரசு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் எவ்விதத் தொய்வுமின்றி விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in