“பாத்ரூமில் 3 மணிநேரம்…” உதய் போட்ட கமெண்ட்டுக்கு சி.டி.ஆர் கொடுத்த அசிங்கமான பதிலடி.. சட்டப்பேரவையில் வெடித்த அநாகரிக உச்சக்கட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாத்ரூமில் 3 மணிநேரம்…” உதய் போட்ட கமெண்ட்டுக்கு சி.டி.ஆர் கொடுத்த அசிங்கமான பதிலடி.. சட்டப்பேரவையில் வெடித்த அநாகரிக உச்சக்கட்டம்..!!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே முகம் சுளிக்கும் வகையிலான அநாகரிக வார்த்தைப் பிரயோகங்களால் கடுமையான அமளி ஏற்பட்டது. அவையில் பேசிய தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுகவின் செந்தில் பாலாஜியைக் குறிப்பிடும் போது முதலில் “கரூர் முன்னாள் MLA” எனக் கூறிவிட்டு, பின்னர் “கோவை MLA என திருத்திக் கொள்கிறேன்” என்று வம்புக்கு இழுக்கும் பாணியில் பேசினார். செந்தில் பாலாஜி மீதான இந்த விமர்சனத்தால் கடும் கோபமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக எழுந்து, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை “சங்கி அமைச்சர்” எனப் பகிரங்கமாகச் சாடினார்.

உதயநிதியின் இந்த ‘சங்கி’ விமர்சனத்திற்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “பாத்ரூமில் 3 மணிநேரம் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்” என உதயநிதியின் தனிப்பட்ட விஷயத்தை அநாகரிகமான முறையில் அவையில் விமர்சித்துப் பேசினார். இருதரப்பு முக்கியத் தலைவர்களும் தங்களது தகுதியை மறந்து இத்தகைய தரம் தாழ்ந்த மற்றும் முகம் சுளிக்கும் வார்த்தைகளால் மாறி மாறித் தாக்கிக் கொண்டதால் பேரவையில் மிகப்பெரிய கூச்சல் குழப்பம் நிலவியது. மக்கள் பிரச்னைகளைப் பேச வேண்டிய சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்ட விதம் நடுநிலையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in