“அரசு கார் வேண்டாமென்ற உதயநிதி… அவரு தங்கியிருக்க அரசு பங்களாவ காலி செய்வாரா…?” சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அரசு கார் வேண்டாமென்ற உதயநிதி… அவரு தங்கியிருக்க அரசு பங்களாவ காலி செய்வாரா…?” சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி..!!

Published

on

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, அரசு காரை வேண்டாம் என்று சொல்லும் உதயநிதி ஸ்டாலின், அவர் வசிக்கும் அரசு பங்களாவை வேண்டாம் என்று சொல்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழக முதல்வர் என்பவர் மாநிலத்தின் அனைத்து மக்களுக்குமான அறிவிப்புகளையே வெளியிட முடியும் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், சொந்தமாக கார்களை வைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் காரைப் பெற மாட்டார்கள் என்று தெரிவித்தார். அதேவேளையில், எளிய பின்னணியில் இருந்து வரும் உறுப்பினர்களுக்கு அது தேவையான ஒன்றுதானே என்றும் வினவினார். மேலும், ஏற்கனவே 3 மற்றும் 4 வீடுகளை வைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் தான், தனக்கு அரசு பங்களா வேண்டும் என்று என்னிடம் விண்ணப்பித்தார் எனவும் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in