“சட்டம்-ஒழுங்கு சீர்கேடுதான் இந்த டம்மி முதல்வரின் சாதனை..” ஒரு பக்கம் குழந்தைகள் மாயம்.. மறுபக்கம் கைதிகள் ஓட்டம்..! தேனி சிறை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி உதயநிதி விளாசல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சட்டம்-ஒழுங்கு சீர்கேடுதான் இந்த டம்மி முதல்வரின் சாதனை..” ஒரு பக்கம் குழந்தைகள் மாயம்.. மறுபக்கம் கைதிகள் ஓட்டம்..! தேனி சிறை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி உதயநிதி விளாசல்..!!

Published

on

சட்டம்-ஒழுங்கு சீர்கேடுதான் இந்த டம்மி முதல் – அமைச்சரின் சாதனை என எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன். சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது? என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதல்-அமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் – மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று சட்டம்-ஒழுங்கு சீர்கேடின் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த டம்மி முதல்-அமைச்சரின் சாதனை. தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in