LATEST NEWS
“யாரும் எதிர்பார்க்காத திடீர் ட்விஸ்ட்.. கரூரில் கழன்றது திமுக கொடி.. செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் காட்டிய ‘சைலண்ட்’ சிக்னல்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!
திமுகவை விட்டு விலகும் முடிவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பேரவையில் பிற அமைச்சர்கள் இவரை நோக்கி விமர்சனங்களை முன்வைத்த போது, கட்சியின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினே நேடியாக எழுந்து நின்று இவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
இருப்பினும், கட்சித் தலைமை தமக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்கிற அதிருப்தி செந்தில் பாலாஜிக்கு இன்னும் அகலவில்லை என்று கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூரில் உள்ள அவருடைய தீவிர ஆதரவாளர்கள் பலரும் தற்போது தங்களது கார்களில் திமுக கொடி கட்டுவதைத் தவிர்த்து வருவது இந்த ஊகங்களை மேலும் பலப்படுத்தியுள்ளது. ஒருவேளை செந்தில் பாலாஜி திமுகவிலிருந்து விலகிக் கட்சி மாற முடிவெடுத்தால், அவர் எந்தக் கட்சிக்குச் செல்வார் என்பது தற்போது தமிழக அரசியலின் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
