செம மாஸ் போங்க… கொஞ்சம் தவறினாலும் அவ்வளவுதான்..! தண்டவாளத்துல மாட்டிக்கிட்ட ஒட்டகம்… டக்குனு ரயிலை நிறுத்தி JCB-ல மீட்ட லோகோ பைலட்..! இணையத்தில் குவியும் பாராட்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம மாஸ் போங்க… கொஞ்சம் தவறினாலும் அவ்வளவுதான்..! தண்டவாளத்துல மாட்டிக்கிட்ட ஒட்டகம்… டக்குனு ரயிலை நிறுத்தி JCB-ல மீட்ட லோகோ பைலட்..! இணையத்தில் குவியும் பாராட்டு..!!

Published

on

குஜராத்தின் வான்ஸ்ஜாலியா மற்றும் ராணாவாவ் ரயில் பாதைக்கு இடையே பால எண் 95-ல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாதரிலிருந்து போர்பந்தர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் எண் 19015 வழக்கமான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தபோது, பாலத்தின் தண்டவாளத்தில் ஒரு ஒட்டகம் சிக்கி அமர்ந்திருப்பதை லோகோ பைலட் கவனித்தார். குறுகலான அந்தப் பாலத்தில் ஒட்டகத்தால் முன்னும் பின்னும் நகர முடியாத நிலை இருந்தது. சற்றே தாமதித்திருந்தாலும் பெரிய விபத்து நேர்ந்திருக்கும், ஆனால் லோகோ பைலட் சற்றும் யோசிக்காமல் உடனடியாக எமர்ஜென்சி பிரேக் போட்டு, ஒட்டகத்தின் அருகே ரயிலைச் பாதுகாப்பாக நிறுத்தினார்.

ரயில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கும் உள்ளூர் ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர். ஒட்டகம் பயந்துபோய் இருந்ததாலும், பாலத்தில் போதிய இடவசதி இல்லாததாலும் அதை நடந்து அழைத்து வர முடியவில்லை. இதனால் ஒரு JCB இயந்திரம் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மிகவும் கவனமாக ஒட்டகத்திற்கு காயம் எதுவும் ஏற்படாத வகையில் தடிமனான கயிறுகள் மற்றும் பெல்ட்களால் அதைக் கட்டி, JCB உதவியுடன் மெதுவாக உயர்த்திப் பாலத்திலிருந்து பாதுகாப்பாகக் கீழே இறக்கினர்.

Advertisement
https://twitter.com/i/status/2092850136041103723

இந்த மீட்புப் பணியின் போது ஊழியர்கள் யாரும் அவசரப்படாமல் ஒட்டகத்திற்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் மிக நேர்த்தியாகச் செயல்பட்டு, அதைச் பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தின் வீடியோவை பவநகர் ரயில்வே கோட்ட மேலாளரின் அதிகாரப்பூர்வ ‘X’ பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில்வே ஊழியர்களின் இந்தச் மனிதாபிமான நடவடிக்கையையும், லோகோ பைலட்டின் துரிதமான சுதாரிப்பையும் இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in