LATEST NEWS
உன் DP யில் இருப்பது யார்..? இந்த பொண்ணு சூப்பரா இருக்காளே.. என் மகளையும் ஆபாசமாக… தவெக மாவட்ட செயலாளர் மீது பெண் பகீர் குற்றசாட்டு.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி. விஜய் மோகன் மீது, ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கட்சியில் மகளிர் அணியில் முக்கியப் பதவி வாங்கித் தருவதாகக் கூறி இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பழகிய அவர், வீடியோ காலில் தவறாக நடக்க வற்புறுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் விஜய் மோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், தவெக மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். மேலும், “எனது சமூக வலைத்தள பக்கத்தின் DP-யைப் பார்த்து, ‘யார் இது?’ என எனது மகளைப் பற்றியும் பாலியல் ரீதியாக இழிவான கேள்விகளைக் கேட்டார்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தன்னுடைய அந்தரங்க வீடியோக்கள் மற்றும் ஆபாசப் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு, அதை வெளியிடுவதாகக் கூறி தொடர்ந்து தன்னை மிரட்டி வந்ததாகவும் அவர் வேதனையோடு பகிர்ந்துள்ளார்.
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி வரும் தவெகவின் முக்கிய மாவட்ட நிர்வாகியே இத்தகைய தீவிரமான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது அரசியல் வட்டாரத்திலும், கட்சியின் தொண்டர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தும் கூட, விஜய் மோகன் இதுவரை கைது செய்யப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையே, குற்றச்சாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாலியல் புகாரில் சிக்கிய விஜய் மோகனை தவெக தலைமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
