வெறும் ‘டீ’ வித்து மாசம் 1.35 லட்சம் சம்பாதிக்கலாமா?!.. இந்த வீடியோவை பார்த்தா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெறும் ‘டீ’ வித்து மாசம் 1.35 லட்சம் சம்பாதிக்கலாமா?!.. இந்த வீடியோவை பார்த்தா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க..!!

Published

on

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் அதிக பணம் சம்பாதிக்க பெரிய நிறுவனங்களில் வேலை செய்யவோ அல்லது லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய தொழில் தொடங்கவோ விரும்புகிறார்கள். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, அதிக லாபம் ஈட்டுவதற்கு பெரிய முதலீடு தேவையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. ஒரு இளைஞர், ரயில் நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடத்தில் வெறும் தேநீர் விற்பனை செய்வதன் மூலம் ஒரு நாளில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதைக் கண்டறிய ஒரு சுவாரசியமான பரிசோதனையைச் செய்து பார்த்துள்ளார்.

அந்த இளைஞர் ஒரு ரயில் நிலையத்தின் வெளியே உள்ள தேநீர் கடையிலிருந்து ஒரு முழு கெட்டல் தேநீரை ஒரு கப் 5 ரூபாய் என்ற வீதத்தில் வாங்கினார். பின்னர், அந்த தேநீரை ரயில் நிலையத்திற்கு வெளியே வந்து செல்லும் பயணிகளிடம் ஒரு கப் 15 ரூபாய் வீதம் விற்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் மக்கள் தன்னிடம் தேநீர் வாங்குவார்களா என்ற தயக்கம் அவரிடம் இருந்தது. ஆனால், கோடைக்காலமாக இருந்தபோதிலும் மக்கள் அவரிடம் ஆர்வமாக தேநீர் வாங்கத் தொடங்கினர். வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் அவர் 70 கப்புகள் விற்றுத் தீர்த்தார். கெட்டல் காலியானதும் மீண்டும் அந்தக் கடைக்காரரிடமே சென்று நிரப்பிக் கொண்டு வந்து, நாள் முழுவதும் இதேபோல் தேநீர் விற்பனையைத் தொடர்ந்துள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/DZUy2E5vzZ-/?utm_source=ig_web_button_share_sheet

மாலைக்குள் அவர் மொத்தம் சுமார் 400 கப் தேநீரை விற்பனை செய்து முடித்தார். ஒரு கப் தேநீரை 5 ரூபாய்க்கு வாங்கி 15 ரூபாய்க்கு விற்றதால், அவருக்கு ஒரு கப்புக்கு 10 ரூபாய் லாபம் கிடைத்தது. இதன் மூலம் ஒரே நாளில் அவரது நிகர லாபம் சுமார் 4,000 ரூபாயாகவும், மொத்த வருமானம் 4,500 ரூபாயாகவும் இருந்தது. இதே கணக்கின்படி ஒவ்வொரு நாளும் விற்பனை நடந்தால், ஒரு மாதத்திற்கு 1.35 லட்சம் ரூபாயும், ஒரு வருடத்திற்கு 16 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகவும் சம்பாதிக்க முடியும் என அந்தக் காணொளியில் கணக்கிடப்பட்டுள்ளது. சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து உழைத்தால், சிறிய முதலீட்டிலும் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும் என்பதை இந்த வைரல் காணொளி நிருபித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in