LATEST NEWS
BREAKING: 3,334 பேர் கொத்தாக கைது… முதல்வர் விஜய் அதிரடி ஆக்ஷன்..!!
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி ‘கிளீன் ஆபரேஷன்’ மூலம் கடந்த 7 நாட்களில் 3,334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 24,025 ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தலைமறைவாக இருந்த 949 குற்றவாளிகள் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நீதிமன்றத்தால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகத் தலைமறைவாகத் திரிந்த 2,385 பேரும் இந்த வேட்டையில் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும் காவல்துறை எடுத்துள்ள இந்த அதிரடி ஆக்ஷன் ரவுடிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
