“அப்பவே ஜெயில்ல போட்ருக்கணும்”.. முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக பாய்ந்த முன்னாள் அமைச்சர்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்பவே ஜெயில்ல போட்ருக்கணும்”.. முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக பாய்ந்த முன்னாள் அமைச்சர்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

கரூரில் தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரான நடிகர் விஜய் நடத்திய அரசியல் பிரச்சாரப் பேரணியின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து தற்பொழுது உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்நிலையில் கரூர் சம்பவத்தின் போதே தமிழக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை ‘லாக்’ செய்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கரூரில் பிரச்சினை ஏற்பட்ட போதே விஜய்யை லாக் செய்திருந்தால் அனைத்தும் சரியாக நடந்திருக்கும் என்றும், ஆதவ் அர்ஜுனாவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகவும் இளகிய மனதுக்காரர் என்பதால் தான், இதுபோன்ற விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் அனைத்தையும் பொறுத்துக் கொண்டார் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in