LATEST NEWS
தவெக-வின் இளைஞர் படையை வீழ்த்த திமுகவின் மாஸ்டர் பிளான்.. புதிய அணிகள், மா.செ. பதவிகளுடன் அதிரடி வியூகம்..!!
இளம் தலைமுறை வாக்காளர்களைக் கவர திமுக புதிய அணிகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அக்கட்சியின் மறுசீரமைப்பு குழு தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இளம் ஆசிரியர்கள், இளம் டாக்டர்கள், இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை சார்ந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து புதிய பிரிவுகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இளைஞரணியினருக்கு கணிசமான அளவில் மாவட்ட செயலாளர் பதவிகளை வழங்கி, கட்சியில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய வியூகம், தமிழக அரசியல் களத்தில் வேகமாக வளர்ந்து வரும் தவெக கட்சியின் இளைஞர் படையை எதிர்கொள்வதற்காக வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக-வின் இளைஞர் ஈர்ப்பைச் சமாளிக்கவும், புதிய தலைமுறை வாக்காளர்களைத் தங்கள் பக்கம் தக்கவைக்கவும் திமுக இந்த அதிரடி பிளானை கையில் எடுத்துள்ளது. அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திமுகவின் இந்த புதிய உத்தி, தவெக-வின் இளைஞர் பலத்தை முறியடித்து ஒர்க்அவுட் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
