LATEST NEWS
BREAKING: கரூர் முதல்வர் விஜய் நிகழ்ச்சி ஏற்பாட்டில் விபத்து.. பெரும் பரபரப்பு..!!
கரூரில் தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணியின் போது ஒரு எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது. வெண்ணெய்மலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மைதானத்தில் சுமார் 5,000 பேர் அமரக்கூடிய வகையில் இரும்புத் தூண்களைக் கொண்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது, கிரேன் பெல்ட் திடீரென அறுந்ததால் ராட்சத இரும்பு ராடு மற்றும் தூண்கள் சரிந்து கீழே விழுந்தன. அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் தப்பினர். இச்சம்பவத்திற்குப் பிறகு அங்கு நிலைமை சீராக்கப்பட்டு, பணிகள் மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக நடத்திய அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட மிக மோசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 பேரின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவே முதல்வர் விஜய் இந்த முறை கரூர் பயணத்தை மேற்கொள்கிறார். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் கரூர் மாவட்டத்திற்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்தச் சந்திப்பின் போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்ட கால வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் இதர நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
