CRIME
“ஷாக்!.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி?.. வேறு மாநிலத்தில் தோண்டப்பட்ட பிணம்.. பல மாதங்களுக்கு பின் அம்பலமான பகீர் உண்மை”..!!
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்டயா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சத்யவதி மியாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த காணாமல் போனவர் வழக்கு, பல மாதங்களாக எந்தத் துப்பும் கிடைக்காததால் தொழில்நுட்ப விசாரணையை நோக்கித் திரும்பியது. போலீசாரின் தீவிர செல்போன் அழைப்புப் பதிவுகள், இருப்பிடத் தகவல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் போன்ற டிஜிட்டல் தடயங்களின் ஆய்வில், சத்யவதிக்கும் அவரது காதலனுக்கும் இந்த மாயமான சம்பவத்தில் நேரடித் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .
மேலும் இந்த வழக்கு கொலை வழக்காக மாறியது. போலீசாரின் பிடி இறுகியதும் சத்யவதி தனது காதலனுடன் சேர்ந்து கணவர் பெண்டயாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலையை மறைப்பதற்காக, உடலை ஹைதராபாத்தில் இருந்து கடத்திச் சென்று மகாராஷ்டிர மாநில எல்லைப் பகுதியில் ரகசியமாகப் புதைத்ததும் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் மகாராஷ்டிர போலீசாரின் உதவியோடு புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கணவர் காணவில்லை என்று நாடகமாடிவிட்டு, பின்னணியில் கொலைச் சதிக்கு மூளையாகச் செயல்பட்ட சத்யவதியைக் கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள காதலன் குறித்தும், இந்த கொடூரக் கொலையின் முழுத் திட்டம் குறித்தும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
