LATEST NEWS
வயசாவது… போராவது… ஓபன் ஜிம்மில் மாஸ் காட்டும் ‘அல்ட்ரா மாடர்ன்’ பாட்டி..! நெட்டிசன்களை வாயடைக்க வைத்த வைரல் வீடியோ..!!
சமூக ஊடகங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு முதிய பாட்டியின் உடற்பயிற்சி வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து, மிக வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாக வயதானவர்கள் என்றாலே ஓய்வெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி, இந்தத் பாட்டி காட்டியுள்ள சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வைரல் வீடியோவில், ஒரு பொதுப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணத்தைப் பயன்படுத்தி அந்தப் பாட்டி மிகத் தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறார். குறிப்பாக, தனது இடுப்புப் பகுதியை வலுவாக்கும் பயிற்சியை எந்தவொரு தயக்கமும் இல்லாமல், முழுத் தன்னம்பிக்கையுடன் அவர் செய்கிறார். அவரது இந்த சுறுசுறுப்பான வேகம், இன்றைய இளைஞர்களுக்குக் கூட சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.
https://www.instagram.com/reel/DagBNN0y8sd/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் navya._9x என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும், “வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே” என்றும், “உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மன உறுதியும் ஆசையும் இருந்தால் போதும்” என்றும் அந்தப் பாட்டியின் ஆரோக்கிய ஆர்வத்தைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஆரோக்கியமான வாழ்விற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உந்துதலாக அமைந்துள்ளதாகப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
