LATEST NEWS
இரண்டாவது திருமணம் செய்யும் தொகுப்பாளினி டிடி?…. மாப்பிள்ளை யார் தெரியுமா?…. தீயாய் பரவும் செய்தி….!!!!
விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
இதனிடையே பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி தற்போது உடல் நல குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். முக்கியமான படங்களின் ப்ரோமோஷன் இன்டர்வியூ மட்டும் தொகுத்து வழங்கி வரும் இவர் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.
இதனிடையே டிடி ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது தனியாக தனது அம்மாவுடன் வசித்து வரும் டிடிக்கு மறுமணம் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
