“அவர் இதை மட்டும் செய்ததே கிடையாது”…. விஜய் பற்றி புகழ்ந்து தள்ளிய பிக்பாஸ் நடிகை சம்யுக்தா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவர் இதை மட்டும் செய்ததே கிடையாது”…. விஜய் பற்றி புகழ்ந்து தள்ளிய பிக்பாஸ் நடிகை சம்யுக்தா….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பூ மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் வாரிசு படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் ஒரு வருடமாக நடித்தது குறித்து பிக் பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா பேசினார். அப்போது, விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருநாளும் போன் பயன்படுத்தியது கிடையாது. கேரவனுக்கு கூட போக மாட்டார். நான் அங்கு புதுமுகம், ஆனால் படத்தில் நடித்த மற்ற அனைவருமே லெஜெண்ட்ஸ் என்று சம்யுக்தா கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in