LATEST NEWS
BREAKING: கொளத்தூரில் வென்றது நான் தான்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி வழக்கு..!!
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமக்கு ஏற்பட்ட தோல்வியை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அத்தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் மென்பொருள்களில் பல்வேறு முறைகேடுகளும், கோளாறுகளும் ஏற்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபாட் (VVPAT) ஒப்புகைச் சீட்டுகளில் பல்வேறு முறைக்கேடுகள் கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து இயந்திரங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இறுதி முடிவாக, கொளத்தூர் தொகுதியில் நானே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
