LATEST NEWS
“நாங்க கலெக்டர்ட்டயே சொல்றோம்..!” பிரசவ வார்டில் கர்ப்பிணியை தவிக்கவிட்ட அவலம்.. கேமராவை பார்த்ததும் எகிறிய லேடி டாக்டர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கடந்த மூன்று நாட்களாகக் கடுமையான பிரசவ வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்த நிலையிலும், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களும் பெண் மருத்துவர்களும் எந்தவொரு மேல்நடவடிக்கையையும் எடுக்காமல் காலம் கடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனைக்கு வெளியே இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்கி வருமாறு வற்புறுத்தி, பில் தொகையை தேவையின்றி உயர்த்தியதாகவும் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
प्रयागराज के SRN हॉस्पिटल में एक महिला मरीज को तीन से भर्ती किया गया है। महिला प्रसव के कारण दर्द से तड़प रही थी। लेकिन डॉक्टर्स कुछ करने को नहीं।
आखिर में मरीज के परिवार वालों ने 112 पुलिस को कॉल कर दिया ,तो डॉक्टर महिला बहुत झगड़ा करने लगी।
दोनों में बहुत हंगामा होने लगा। pic.twitter.com/3D4PUjqaIX— सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) August 21, 2026
இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் குடும்பத்தினர், உடனடியாக 112 என்ற அவசர போலீஸ் எண்ணைத் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகப் புகாரளிப்பதாகக் கூறி மொபைல் போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த பெண் மருத்துவர், அனுமதி இல்லாமல் வீடியோ எடுக்கக்கூடாது எனக்கூறி நோயாளியின் குடும்பத்தினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட இந்தத் தீவிர மோதல் மற்றும் கூச்சல் குழப்பம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்த கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
