அமைச்சர் நிர்மல் குமார் வைத்த மாஸ் பொறி… அசால்ட்டாக சிக்கிய உதயநிதி.. விஜய்யை டார்கெட் செய்யப்போய் சிக்கிய திமுக..பேரவையில் நடந்த அந்த ட்விஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அமைச்சர் நிர்மல் குமார் வைத்த மாஸ் பொறி… அசால்ட்டாக சிக்கிய உதயநிதி.. விஜய்யை டார்கெட் செய்யப்போய் சிக்கிய திமுக..பேரவையில் நடந்த அந்த ட்விஸ்ட்..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையின் மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழக வெற்றிக் கழக அரசைச் சேர்ந்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கும் இடையே வெடித்த கடுமையான வார்த்தைப் போர் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மின்வெட்டு மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து திமுக தரப்பு எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், முந்தைய திமுக ஆட்சிக்கால மின்சாரத்துறைச் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். இந்த விவாதத்தின் போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சரை ‘சங்கி அமைச்சர்’ எனக் குறிப்பிட, அதற்குப் பதிலடியாக அமைச்சர் நிர்மல் குமார், அண்மையில் போலீஸ் கைது நடவடிக்கையின் போது உதயநிதி வீட்டில் நடந்த நிகழ்வை மறைமுகமாகக் சுட்டிக்காட்டி ‘மூன்று மணி நேரம் பாத்ரூமில் அமர்ந்திருந்தவர்’ எனத் தனிநபர் ரீதியாக விமர்சித்துப் பேசினார். இந்தத் காரசாரமான மோதல் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.

அரசியல் விமர்சகர்களின் பார்வையில், இந்த விவாதம் ஆளுங்கட்சியான தவெக-விற்குச் சாதகமாகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுக-விற்குப் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. பேரவையில் தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஆகியோரை நேரடியாகத் தாக்கி அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க திமுக திட்டமிட்டிருந்த நிலையில், விவாதம் முற்றிலும் தடம் மாறி தனிநபர் விமர்சனங்களை நோக்கி நகர்ந்துவிட்டது. ‘முதலமைச்சர் விஜய் Vs உதயநிதி ஸ்டாலின்’ என்ற பிரதான அரசியல் பேசுபொருளாக மாறியிருக்க வேண்டிய விவாதக் களம், அமைச்சர் நிர்மல் குமாரின் லாவகமான மற்றும் ஆக்ரோஷமான மடைமாற்றத்தால் ‘நிர்மல் குமார் Vs உதயநிதி’ என்று சுருங்கிப் போனது. இந்தத் திடீர் அரசியல் நகர்வும், அமைச்சர் வைத்த வார்த்தைப் பொறியில் உதயநிதி ஸ்டாலின் சிக்கிக் கொண்டதும் திமுகவின் பேரவை உத்திகளுக்குக் கிடைத்த சறுக்கலாகவே அரசியல் தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in