LATEST NEWS
அவ்வளவு ரோஷம் இருந்தா.. அவங்கள வெளியே அனுப்பிட்டு ஆட்சி அமைங்க பார்க்கலாம்… 80-களில் காங்கிரஸுக்கு நடந்தது மறந்துடீங்களா..? ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.என்.நேரு சவால்..!!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்குச் சட்டப்பேரவையில் உடனடியாகப் பதிலடி கொடுத்த திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, திமுக கூட்டணியில் இருந்துதான் தாங்கள் வெற்றி பெற்றோம் என்பதைத் தாராளமாக ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார். அதே வேளையில், தங்களது திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவால்தான் நீங்கள் இன்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து காரசாரமாகப் பேசிய கே.என்.நேரு, திமுகவின் பலத்தைக் குறைத்து மதிப்பிடும் உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால், தற்போதைய தவெக ஆட்சியில் இருக்கும் திமுக கூட்டணிப் பிரதிநிதிகளை உடனடியாக வெளியே அனுப்பிவிட்டு, உங்களது தனி பலத்தில் ஆட்சி அமைத்துக் காட்டுங்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அவையிலேயே அதிரடி சவால் விடுத்தார்.
மேலும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்த அவர், கடந்த 1980-களில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பலவீனமடைந்து, தேர்தலில் தோற்று நின்ற இக்கட்டான காலகட்டத்தில், அவர்களுக்குத் தேர்தல் களத்தில் முதன்முதலில் கைகொடுத்துக் தூக்கிவிட்டதே திமுகதான் என்றும் கே.என்.நேரு பெருமிதத்துடன் அவையில் தெரிவித்தார்.
