கதறிய முதியவர்… பதறிய குடும்பத்தினர்… மருத்துவமனையில் அவசர சிகிச்சை! எலிகளின் ராஜ்யமாக மாறியதா இந்திய ரயில்வே..? அலட்சியத்தின் உச்சத்தால் எழுந்த பெருங் கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கதறிய முதியவர்… பதறிய குடும்பத்தினர்… மருத்துவமனையில் அவசர சிகிச்சை! எலிகளின் ராஜ்யமாக மாறியதா இந்திய ரயில்வே..? அலட்சியத்தின் உச்சத்தால் எழுந்த பெருங் கேள்வி..!!

Published

on

சண்டிகரிலிருந்து இந்தூர் நோக்கி வந்த உனா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 78 வயதான ஓய்வுபெற்ற அதிகாரி ஹெச்.பி. கரண் என்பவருக்கு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. இரவில் அவர் தனது பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு எலி அவரது மூக்கை கடித்துக் குதறியுள்ளது. கடும் வலியாலும் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்ததாலும் திடுக்கிட்டு எழுந்த அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெருமளவில் அச்சமடைந்தனர். ரயில் இந்தூர் நிலையத்தை அடைந்ததும், அவர் உடனடியாக அங்குள்ள கொகிலாபென் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எலிக் கடியால் ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்க முதற்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ரயில் பெட்டியில் நிலவிய அசுத்தம் மற்றும் எலிகளின் தொல்லை குறித்து ஏற்கனவே ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்ததாகப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். புகார் அளித்த பிறகு ஊழியர்கள் அசுத்தத்தைச் சுத்தம் செய்தபோதிலும், எலிகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது பூச்சிக்கொல்லி சிகிச்சை மேற்கொள்ளவோ எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் தூய்மைக்கும் வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து இச்சம்பவம் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement

இச்சம்பவம் குறித்து மேலை ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி முகேஷ் குமார் தெரிவிக்கையில், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே இத்தகவலை அறிந்ததாகக் கூறினார். முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் அவசர மணி வசதி உள்ளதாகவும், தேவைப்படும்போது பயணிகள் ஊழியர்களை அழைத்து உடனடியாக மருத்துவ உதவிகளைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வழக்கமாக 15 நாட்களுக்கு ஒருமுறை ரயில்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படும் என்றாலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரயில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் எலிக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in