LATEST NEWS
“ஆட்டோக்காரங்கனாலே இப்படித்தானா..?” நடுரோட்டில் ஸ்கூட்டி பெண்ணை விரட்டிய ஆட்டோ.. பின்னணியில் இருந்த உண்மை தெரிஞ்சா உறைஞ்சு போயிடுவீங்க…!!
பெங்களூரு வீதியில் ஒரு பெண்ணின் ஸ்கூட்டிக்கு அருகில் தொடர்ந்து ஆட்டோ ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ஆரம்பத்தில் அந்த ஆட்டோவில் பயணித்த பயணிக்கு, ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணைத் தொந்தரவு செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அதன் பின்னணியில் இருந்த உண்மை தெரிந்ததும் அனைவரும் அந்த ஆட்டோ ஓட்டுநரின் செயலை வியந்து பாராட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மையில், வழியில் அந்தப் பெண்ணின் ஸ்கூட்டி பழுதடைந்து நின்றுவிட்டதால் அவர் செய்வதறியாது தவித்துள்ளார். இதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் தஞ்சீம், உடனடியாகத் தனது ஆட்டோவின் வேகத்தைக் குறைத்து, தனது ஒரு காலால் ஸ்கூட்டியைத் தள்ளியபடி உதவத் தொடங்கியுள்ளார். எந்தவித அவசரமோ அல்லது லாப நோக்கமோ இன்றி, சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்து அந்த ஸ்கூட்டியைத் தள்ளிச் சென்று, அந்தப் பெண்ணைப் பாதுகாப்பான இடத்திற்குச் சேர்த்துள்ளார்.
https://www.instagram.com/reel/DcYzWbFJRSQ/?utm_source=ig_web_button_share_sheet
இந்த ஆட்டோவில் பயணித்த சேத்னா சர்ராஃப் என்ற கார்ப்பரேட் பெண் ஊழியர், ஆட்டோ ஓட்டுநரின் இந்த மனிதநேயத்தைப் பார்த்து நெகிழ்ந்துபோய் அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், உபர் நிறுவனத்தைக் குறிப்பிட்டு, தஞ்சீம் போன்ற உதவும் மனம் படைத்த ஓட்டுநர்களுக்குப் பாராட்டுகளும் ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இணையத்தில் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “தஞ்சீம் பாய் பற்றி பெருமைப்படுகிறோம்” என்று கூறி அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
