CINEMA
பாராட்டுக்கும், விசில் சாதத்திற்கும் ஏங்கியிருக்கிறேன்…. கெத்து தினேஷ் உருக்கம்…!!

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி பெரிய அளவில் ப்ரோமோஷனல் எதுவுமே இல்லாமல் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், விஜய் சஞ்சனா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் குறைவான ஸ்கிரீன்களுடன் வெளியான நிலையிலும் ரசிகர்களின் பெருமித்த ஆதரவால் மெயின் ஸ்கிரீம் திரைப்படமாக திரையரங்கில் மாறி உள்ளது.
கிரிக்கெட் சார்ந்த உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குனர்கள் பலரும் பாராட்டி உள்ளார்கள். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கெத்து தினேஷ், இந்த மாதிரி பாராட்டுகளுக்கு, விசில் சத்தத்துக்கு ஏங்கியிரு க்கிறேன். இன்னமும் அந்த பாராட்டுகளுக்கு தான், வேலை பார்த்துக்கிட்டே இருக்கேன். நாம் திரையில செய்கிற வேலைக்கு பணம் கிடைக்குது, அதெல்லாம் ok. ஆனால், அதைத் தாண்டி நாம செய்யற வேலைக்கு ஒரு திருப்தியான பலன் கிடைக்குதுன்னா, இந்தப் பாராட்டும், அங்கீகாரமும் தான் என்று கூறியுள்ளார்.