CINEMA
அஜித் மடியில் இருப்பது நான் இல்லை….. இது யார் செஞ்ச வேலை…. கெத்து தினேஷ் விளக்கம்…!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் அஜித்தின் மடியில் குட்டி சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சிறுவன் அட்டகத்தி தினேஷ் தான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டோவில் இருப்பது நான் இல்லை என்று கடந்த 2014 ஆம் வருடம் நான் விளக்கம் கொடுத்துவிட்டேன். அப்போவே நான் பேஸ்புக் பக்கத்திலும் என்னுடைய நண்பர் ஒருவர் மூலமாகவும் இதை தெளிவுபடுத்தி இருந்தேன். அது நான் இல்லை என்று நடிகர் தினேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.