CINEMA
“மஞ்சுமல் பாய்ஸ்” திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்…. மலையாளத்தில் இதுவே முதல்முறை…!!
தமிழகத்தில் ரசிகர்களால் அதிகமாக பேசப்படும் படம் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம். அந்தப் படம் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் பழைய பாடலாக இருந்தாலும் இந்த படத்திற்கு பின் செம டிரெண்ட் ஆனது. வசூல் ரீதியாகவும் படம் ஹிட் அடித்தது.
இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெறும் கினோ பிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இதனையடுத்து இந்த நிகழ்விற்கு தேர்வான முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.