CINEMA
கைதி-2 அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி…. எப்போது தெரியுமா…? வெளியான தகவல்..!!!
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றிபெற்ற ‘கைதி’ படம் வெளிவந்தபோதே அதன் 2ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்..
‘மெய்யழகன்’ படத்தின் புரமோஷன் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷனில் “கைதி 2” படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். கார்த்தி. அடுத்த ஆண்டு (2025) இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.