LATEST NEWS
“தம்பி எந்த வனவிலங்கு கல்லூரில படிச்சீங்க..?” கோவா கடல்ல ‘தண்ணி பாம்பு’னு சீன் போட்ட நபர்.. கலாய்த்து நெட்டிசன்ஸ்..!!
கோவா என்றாலே மனமகிழ்ச்சியும் பொழுதுபோக்கும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அங்குள்ள கடற்கரை நீரில் உலாவச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் கோவா கடற்கரையில் சந்தூ சிங் என்பவர் உலாவிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு அவரது காலில் வந்து மோதியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே அதனை வீடியோ எடுத்து, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சந்தூ சிங் வெளியிட்ட வீடியோவில், இரவு சுமார் 8:30 மணியளவில் கடலின் ஆழமான பகுதிக்கும் கடும் இருளுக்கும் இடையே ஒரு பாம்பு தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை தனது கேமராவில் காட்டுகிறார். அதில் பேசும் அவர், “இது ஒரு நீர் பாம்பு. கோவாவுக்கு வரும் மக்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது படமெடுத்து நிற்பதைப் பார்த்தால் மிகவும் ஆபத்தானதாகத் தெரிகிறது. குறிப்பாகக் குழந்தைகளுடன் வருபவர்கள் கடலில் விளையாடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
https://www.instagram.com/reel/DeEn5hky6e9/?utm_source=ig_web_button_share_sheet
சந்தூ சிங் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். வீடியோவில் இருப்பது நீர் பாம்பு அல்ல, அது ஒரு மலைப்பாம்பு (Python) என்று பயனர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் சிலர், “மலைப்பாம்புகளுக்கு விஷம் கிடையாது” என்றும், “இவர் எந்த வனவிலங்கு பல்கலைக்கழகத்தில் படித்தார்?” என்றும் கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில், அந்தப் பாம்பும் கடலில் ஜாலியாக என்ஜாய் செய்து கொண்டிருக்கிறது என்றும் சில பயனர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
