National
“கனவு காண்பதில் தப்பில்லை, ஆனால்…” விஜய் பிரதமராக ஆசைப்படுவதை கிண்டல் செய்த காங்கிரஸ் எம்பி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
டிகர் விஜய் பிரதமராக வேண்டும் என்று சில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். “எல்லோரும் ஆசைப்படலாம், ஆசைக்கும் கனவு காண்பதற்கும் சட்டம் போட முடியாது” என்று குறிப்பிட்டுள்ள அவர், அன்புமணி ராமதாஸ் கூட 2031-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராவேன் என்று கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கனவு காண்பதற்கும் ஆசைப்படுவதற்கும் எந்தத் தடையும் இல்லை என்றாலும், அரசியல் களத்தில் இறுதி முடிவைத் தேர்தல் வெற்றிதான் தீர்மானிக்கும் என்றும் அவர் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
