LATEST NEWS
“மணி கணக்கா காக்க வச்சுட்டு இப்படி பண்ணிட்டாங்களே..!” புவனேஸ்வர் ஏர்போர்ட்டில் இண்டிகோ செய்த விபரீதம்.. ஊழியர்களிடம் ஆவேசமாகச் சண்டையிட்ட பெண் பயணி.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
புவனேஸ்வரிலிருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், நேற்று பயணிகள் பெரும் தவிப்பிற்குள்ளாகினர். மதியம் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம், திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து பல மணி நேரம் கழித்து, மாலை 5:30 மணியளவில்தான் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான ரத்து குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தகுந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், மாலை 6 மணி வரை முறையான வழிகாட்டுதலோ அல்லது மாற்று ஏற்பாடுகளோ இல்லாமல் தங்களை விமான நிலையத்திலேயே காக்க வைத்ததாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Passengers at Bhubaneswar Airport were left stranded after an IndiGo flight scheduled to depart at 2:35 PM was reportedly cancelled at around 5:30 PM, several hours after the scheduled departure time, yesterday.
They were not given timely information about the cancellation and,… pic.twitter.com/pGXPT8FOP3— Srikanth Bhalaji (@SBhalaji94) August 14, 2026
விமான நிறுவன ஊழியர்கள் தங்களுக்குச் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று பெண் பயணி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பெண் பயணி கூறுகையில், “எங்கள் விமானம் மதியம் 2:35 மணிக்குச் செல்ல வேண்டியது. ஆனால், எங்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தராமல் மாலை 5:30 மணிக்கு திடீரென விமானத்தை ரத்து செய்துவிட்டனர். முறையான பதில் எதுவும் கிடைக்காததால் புவனேஸ்வர் விமான நிலையத்தில் நாங்கள் தவித்து வருகிறோம்” என வேதனையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
