LATEST NEWS
எப்பா சாமி..! “இது டிரெய்னா இல்லை பிளைட்டா..?” வந்தே பாரத் ஸ்லீப்பரில் முதல்முறை பயணம் செய்த பெண் சொன்ன அதிரடி கருத்து.. வைரலாகும் வீடியோ…!!
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்கப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில், சாய்னா சைவான் என்ற பிரபல பயண வலைப்பதிவர் இந்த ரயிலில் முதன்முறையாகப் பயணம் செய்து தனது நேர்மையான விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார். ரயிலின் உள்வடிவமைப்பு மிகவும் அழகாகவும், அரச தோற்றத்துடனும் இருந்ததால், ‘தனக்குச் சாதாரண ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வே வரவில்லை’ என்று அவர் ஆச்சரியத்துடன் கூறியுள்ளார். மேலும், இரவில் ரயிலுக்குள் எரியும் நீல நிற விளக்குகளும், ரயில்வே வழங்கிய புதிய படுக்கை விரிப்புகளும் மிகவும் நேர்த்தியாகவும் பிரீமியமாகவும் இருந்ததாக அவர் பாராட்டியுள்ளார்.
ரயிலின் கழிப்பறை வடிவமைப்பு மற்றும் உணவின் தூய்மை ஆகியவை அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளன. கழிப்பறை மிகவும் தூய்மையாக இருந்ததுடன், வழக்கமான ரயில் கழிப்பறையைப் போல இல்லாமல் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உணவு பரிமாறிய ஊழியர்கள் கைகளில் உறை அணிந்து மிகவும் சுகாதாரமான முறையில் உணவை வழங்கியதைச் சுட்டிக்காட்டினார். ஒட்டுமொத்தமாக இந்த ரயிலில் பயணித்த அனுபவம் ஒரு விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DafnxNtzHYB/?utm_source=ig_web_button_share_sheet
இறுதியில் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்த சாய்னா, “இந்திய ரயில்வே நமக்கு இவ்வளவு சிறந்த வசதிகளை வழங்கும் போது, அதைச் சுத்தமாகவும் சிறப்பாகவும் பராமரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்; அனைவரும் பொறுப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே இந்த பிரீமியம் அனுபவம் தொடரும்” எனக் கூறியுள்ளார். “வந்தே பாரத்தில் எனது நேர்மையான விமர்சனம்” என்ற தலைப்பில் அவர் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பயணிகள் தங்களது பொறுப்பை உணர வேண்டும் என்ற அவரது கருத்தை நெட்டிசன்கள் பலரும் ஆதரித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
