LATEST NEWS
“நான் உனக்கு அக்காவா..?” அந்த ஒரு வார்த்தைக்காக நடுரோட்டில் நடந்த ஒரு மணி நேர ரகளை.. காரை மறித்து நின்ற பெண்.. அலறியோடிய வாகன ஓட்டிகள்.. வைரல் வீடியோ..!!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில், ‘தீதி’ என்று அழைத்ததற்காக ஒரு பெண் நடுரோட்டில் கார் முன்பாக நின்று ரகளை செய்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள அழகான நகரமான ஜபல்பூரில் போக்குவரத்து நெரிசல் சகஜமான ஒன்றுதான் என்றாலும், இம்முறை ஏற்பட்ட நீண்ட போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு விசித்திரமான காரணமே பின்னணியாக அமைந்துள்ளது. ‘For.men.india’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், பெண் ஒருவர் காரின் முன்பாக வழிமறித்து நிற்க, அவருக்குப் பின்னால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதைக்காண முடிகிறது.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமையன்று ஜபல்பூரின் கர்ஹா பகுதியில் நடந்துள்ளது. அங்கே ஒரு கார் ஓட்டுநர் நெரிசலான சாலையில் தனது காரை வெளியே எடுக்க முயன்றபோது, அருகே சென்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து மரியாதையாக “தீதி, கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்தப் பெண், “நான் உனக்கு அக்கா மாதிரி தெரிகிறேனா? என்னை ஏன் தீதி என்று கூப்பிடுகிறாய்?” எனக் கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தான் மரியாதையாகத்தான் பேசினேன் என ஓட்டுநர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காத அந்தப் பெண், கோபத்தில் காரின் நடுவே சென்று நின்று கொண்டார்.
https://www.instagram.com/p/DcwD26wH06S/?utm_source=ig_web_button_share_sheet
கார் முன்னோக்கிச் சென்றால் பெண்ணுக்கு அடிபட்டுவிடும் என்பதால் ஓட்டுநர் பிரேக் போட்டு காரை நிறுத்தினார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் நகர முடியாமல், சுமார் ஒரு மணி நேரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றி இருந்தவர்கள் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற, அந்த வீடியோ தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மரியாதையாக அழைப்பதற்குக்கூட இதுபோன்ற எதிர்ப்புகளும் ரகளையுமே பதிலா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
