“முதல்ல ராங் கால்.. அப்புறம் தான் ஆட்டமே” வீடியோ காலில் நிர்வாணமாக வரவச்சி… 24 வயது அழகியின் ‘ஸ்கிரீன் ரெக்கார்ட்’ மாஸ்டர் பிளான்.. அதிரவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“முதல்ல ராங் கால்.. அப்புறம் தான் ஆட்டமே” வீடியோ காலில் நிர்வாணமாக வரவச்சி… 24 வயது அழகியின் ‘ஸ்கிரீன் ரெக்கார்ட்’ மாஸ்டர் பிளான்.. அதிரவைக்கும் பின்னணி..!!

Published

on

வீடியோ காலில் ஆடையின்றி வரவழைத்து அதை ரகசியமாக ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து, வாலிபர் ஒருவரைப் பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ₹2 லட்சம் பறித்த 24 வயது இளம் பெண் அம்ரிதா கவுர் என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்ற வாலிபருக்குப் போன் செய்த அம்ரிதா, முதலில் ராங் கால் எனப் பேசி அறிமுகமாகி, நாளடைவில் அவரிடம் நெருக்கமாகப் பழகி காதலிப்பது போல் நடித்துள்ளார்.

நட்பு முற்றிய நிலையில், அம்ரிதா வற்புறுத்தியதால் அபிஷேக் அவரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அபிஷேக்கின் அந்தரங்க உடல் பாகங்களை ஆசைகாட்டிப் பார்க்க வைத்த அம்ரிதா, அதனை அவரது அனுமதியின்றி ரகசியமாகத் தனது மொபைலில் ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை வைத்து, “கேட்ட பணத்தைக் கொடுக்காவிட்டால் பொய்யான பாலியல் பலாத்கார வழக்கில் உன்னைச் சிறைக்கு அனுப்பிவிடுவேன்” எனப் மிரட்டத் தொடங்கியுள்ளார்.

Advertisement

அம்ரிதாவின் மிரட்டலுக்குப் பயந்து அபிஷேக் முதற்கட்டமாக ₹2 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் பெண் பேராசையினால் மேலும் மேலும் பணம் கேட்டுத் தொல்லை கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அபிஷேக், கடந்த ஜூலை 24 அன்று பிரேம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அம்ரிதாவை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதற்கிடையே, திங்கட்கிழமை காலை சாட்டிலைட் பேருந்து நிலையம் அருகே அம்ரிதா நடமாடுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் காலை 11:10 மணியளவில் அம்ரிதாவை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில், தனது ஆடம்பர வாழ்க்கைக்காகவும் பிழைப்புக்காகவும் இந்த நூதனப் பணப்பறிப்புக் குற்றத்தைச் செய்ததாக அம்ரிதா ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in