“காப்பாத்துங்க, காப்பாத்துங்க..!” நடுரோட்டில் அலறிய சிறுமி… 10 பெண்களை கடத்தி.. சென்னை ராமாபுரம் பங்களாவுக்குள் நடந்த கொடூரம் அம்பலம்…!! – cinefeeds
Connect with us

CRIME

“காப்பாத்துங்க, காப்பாத்துங்க..!” நடுரோட்டில் அலறிய சிறுமி… 10 பெண்களை கடத்தி.. சென்னை ராமாபுரம் பங்களாவுக்குள் நடந்த கொடூரம் அம்பலம்…!!

Published

on

சென்னையில் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிமாநில மற்றும் வங்கதேசப் பெண்களைக் கடத்தி வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சிப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் சென்ற 17 வயது சிறுமி ஒருவர் “காப்பாற்றுங்கள்” என கூச்சலிட்டதை அடுத்து, பொதுமக்கள் அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அச்சிறுமியிடம் நடத்திய விசாரணையில், ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் பல பெண்கள் சிறை வைக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தத் தகவலை அடுத்து போலீசார் அந்த பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட சுமார் 10 பெண்களைப் பத்திரமாக மீட்டனர். மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சினிமா ஆசைகாட்டி இப்பெண்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இவ்வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான ரியா என்ற பெண் கொல்கத்தாவில் வச்சு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட 5 கூட்டாளிகளையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in