“உஷார் அது நடந்துவிடும்” 10 மாத கடல் பயணம்… சோர்வில் 5,000 அமெரிக்க வீரர்கள்… பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராகத் தீவிர வேட்டை.. பின்னணி என்ன..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உஷார் அது நடந்துவிடும்” 10 மாத கடல் பயணம்… சோர்வில் 5,000 அமெரிக்க வீரர்கள்… பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராகத் தீவிர வேட்டை.. பின்னணி என்ன..?

Published

on

அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புறப்பட்ட அமெரிக்காவின் ‘ஆப்ரஹாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) போர்க்கப்பல் தாய்லாந்தின் ‘லேம் சாபாங்’ துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. சுமார் ஒரு ஆண்டாகத் தொடர்ந்து கடலிலேயே பணியாற்றி கடும் மன உளைச்சலுக்கும் சோர்வுக்கும் ஆளாகியுள்ள சுமார் 5,000 அமெரிக்க வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக, அருகிலுள்ள பட்டாயா நகரின் விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீண்ட நாள் பயணத்திற்குப் பின் ஓய்வெடுக்க வரும் வீரர்கள் மது மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் செல்லும்போது பாலியல் தொழில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பட்டாயா நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் சட்டஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு, சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடிய 40-க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களைக் கைது செய்துள்ளனர்.

Advertisement

ஓய்வில் இருக்கும் அமெரிக்க வீரர் ஒருவர் நாளொன்றுக்குச் சராசரியாக 30 முதல் 91 டாலர் வரை செலவிட வாய்ப்புள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க வீரர்களின் வருகை மற்றும் விடுதி தங்குதல்கள் மூலம் குறுகிய காலத்தில் பட்டாயா நகரத்தின் உள்ளூர் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியடையும் என அந்நகர மேயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in