LATEST NEWS
“பாவம் அவங்களும் மனுஷங்க தானே” ஒரு கிளாஸ் தண்ணீராவது கொடுங்க… இங்கே என்ன நடக்குது பாருங்க.. இதுதான் டெலிவரி ஊழியரின் நிலைமை… கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..!!
கர்நாடகாவைச் சேர்ந்த சீத்தல் என்ற பெண், ஆன்லைன் மூலம் வாங்கிய நகையைத் திரும்பப் பெறுவதற்காக (Return pickup) வந்த டெலிவரி ஏஜெண்டின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்து வைரலாகி வருகிறது.
ஆன்லைன் டெலிவரி ஏஜெண்ட் சீத்தலின் வீட்டிற்கு நகைப் பார்சலை திரும்பப் பெற வந்துள்ளார். அங்கு உட்காரவோ, நகையைச் சரிபார்க்கவோ எந்த மேசையும் இல்லாததால், அவர் அந்தப் பார்சலைச் சரிபார்க்க அப்படியே சாலையோர வெயிலில் தரையில் அமர்ந்து தனது பணியைச் செய்யத் தொடங்கினார்.
https://www.instagram.com/reel/DZ4v_lkz2Xo/?utm_source=ig_web_button_share_sheet
நாம் வீட்டில் ஏசி (AC) காற்றில் அமர்ந்து கொண்டு ஒரு கிளிக்கில் ஆர்டர் மற்றும் ரிட்டர்ன் செய்து விடுகிறோம். ஆனால், நமக்குக் கிடைக்கும் இந்த எளிய வசதிக்கு பின்னால், இந்த முகவர்கள் நாள் முழுவதும் கடுமையான வெயில், டிராஃபிக் மற்றும் சோர்வையும் பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது.
அடுத்த முறை நம் வீட்டிற்கு டெலிவரி செய்யவோ அல்லது பார்சலைத் திரும்பப் பெறவோ யாராவது வரும்போது, அவர்களுக்குச் சிறிது மரியாதை கொடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீரும், ஒரு புன்னகையும் வழங்க வேண்டும் என்று சீத்தல் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
