“அட கொடுமையே..!” துணை முதல்வர் பவன் கல்யாண் பிறந்தநாளில் நேர்ந்த கொடூரம்.. பேனர் கட்டிய வாலிபருக்கு நடந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அட கொடுமையே..!” துணை முதல்வர் பவன் கல்யாண் பிறந்தநாளில் நேர்ந்த கொடூரம்.. பேனர் கட்டிய வாலிபருக்கு நடந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

ஆந்திரப் பிரதேசத்தில் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது, அவரது ஃப்ளெக்ஸ் பேனர் பொருத்திய ரசிகர் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த மாநிலத்திலும் மாபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அமலாபுரத்தில்உள்ள கல்லூரி ஒன்றின் அருகே இந்த அசாத்திய விபரீதம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் வேலை செய்து வந்த பெண்டா முரலங்காவைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற வாலிபர், தனது ஆதர்ச நாயகனான பவன் கல்யாணின் பிறந்தநாள் விழாக்களை மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அசுர ஆசையோடு, தனது நண்பர்களுடன் இணைந்து தனது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.

கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வந்த பிரேம் குமார், கல்லூரிக்கு அருகே பவன் கல்யாணின் ராட்சத ஃப்ளெக்ஸ் பேனரைப் பொருத்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக அங்கே உயர்மின் அழுத்தக் கம்பி மீது பேனர் உரசியுள்ளது. இதனால் ஏற்பட்ட கொடூர மின்சார அதிர்ச்சியில் பிரேம் குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாகத் தனது பிஞ்சு உயிரை மாய்த்துக் கொண்டார். தங்களது அண்ணனின் பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாட நினைத்த இடத்தில், தங்களது அன்பு நண்பன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அவரது நண்பர்கள் மற்றும் ஜனசேனா கட்சியினர் அழுது கதறிய காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அமலாபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், தற்பொழுது சோசியல் மீடியாவில் இத்துயரச் செய்திக்கு எதிராகப் பொதுமக்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in