LATEST NEWS
அதிர்ச்சி…! பெற்றோர் தேடி வந்ததால் பயம்.. நண்பன் வீட்டில் 11-ஆம் வகுப்பு மாணவிகள் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி – ஒருவர் பலி, மற்றொருவர் உயிர் தப்பினார்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில், 11-ஆம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் பள்ளி முடிந்தும் அவர்கள் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் அவர்களைப் பல இடங்களில் தேடத் தொடங்கினர். தீவிரத் தேடுதலுக்குப் பிறகு, அந்த இரு சிறுமிகளும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டில் இருப்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.
தகவலறிந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக அந்த இளைஞரின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். தங்களைத் தேடி பெற்றோர் அங்கு வந்ததைக் கண்ட சிறுமிகள் கடும் பயமும் அதிர்ச்சியும் அடைந்தனர். பெற்றோருக்குப் பயந்து, என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்தில் அந்த வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இந்தத் தூக்கிலாடும் சம்பவத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு சிறுமியின் கயிறு உடைந்ததால், அவர் உயிர்தப்பினார். ஆனால், மற்றொரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், உயிருடன் மீட்ட சிறுமியிடம் விசாரிப்பதுடன், அந்த இளைஞர் யார் மற்றும் சிறுமிகள் ஏன் அங்கு சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
