“இதுவும் ஒரு பொழப்பா..?” முதுகைச் சொறிந்துவிட்டு மாதம் ரூ.14 லட்சம் சம்பாதிக்கும் நபர்… இணையத்தைக் கலக்கும் புதுமையான தொழில்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதுவும் ஒரு பொழப்பா..?” முதுகைச் சொறிந்துவிட்டு மாதம் ரூ.14 லட்சம் சம்பாதிக்கும் நபர்… இணையத்தைக் கலக்கும் புதுமையான தொழில்..!!

Published

on

சீனாவில் மனித உடலை மென்மையாகச் சொறிந்துவிட்டு அமைதியையும் நல்ல உறக்கத்தையும் தரும் “சுமா” என்ற விசித்திரமான கட்டண ஓய்வு சேவையை ஜாங் என்பவர் தொடங்கி வெற்றி கண்டுள்ளார். ஷென்சென் நகரில் இரண்டு கிளைகளுடன் இயங்கும் இச்சேவையில், பயிற்சி பெற்ற பணியாளர்கள் பிரத்யேகக் கூர்முனை நகங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பச் சொறிந்துவிடுகின்றனர். ஒரு மணி நேர அமர்விற்கு 300 யுவான் கட்டணமாக வசூலிக்கப்படும் இச்சேவைக்கு ஆண்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. மசாஜை விட இது அதிக இதமளிப்பதாகக் கூறும் வாடிக்கையாளர்களால், இவரின் இரண்டு கடைகளும் சேர்ந்து தற்போது மாதம் சுமார் 100,000 யுவான் கிட்டத்தட்ட ரூ.14 லட்சம் வருமானம் ஈட்டி லாபகரமாக இயங்கி வருகின்றன.

இணையத்தில் ஒரு பெண் தன் கணவரின் முதுகைச் சொறிந்துவிடும் வீடியோவைப் பார்த்ததும், அதன் கீழ் “யாராவது என் முதுகைச் சொறிந்துவிட்டால் பணம் கொடுக்கத் தயார்” எனப் பலரும் பதிவிட்டிருந்த கருத்துகளுமே ஜாங்கிற்கு இந்த யோசனை தோன்ற முதன்மை காரணமாக அமைந்தது. மேலும், சிறுவயதில் தன் தந்தை தன் முதுகைச் சொறிந்துவிட்டபோது கிடைத்த சுகமான உறக்கமும் இவரை உத்வேகப்படுத்தியது. சீனாவில் இதற்கு முன் இதுபோன்ற முறையான தொழில் எதுவும் இல்லாததால், அவரே மனித உடலின் உணர்திறன் மிக்க பகுதிகளைப் பற்றி ஆராய்ந்து பிரத்யேக நுட்பங்களை உருவாக்கினார். மன அழுத்தம் நிறைந்த பெரிய நகரங்களில் வாழும் மக்களுக்கு இது சிறந்த ஓய்வைத் தருவதால் இச்சேவைக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.

Advertisement

பட்டப்படிப்பிற்குப் பிறகு ஏழு வேலைகள், இரண்டு மின்வணிக நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகத் துறை எனப் பல முயற்சிகளில் தோல்வியைத் தழுவிய 30 வயதான ஜாங்கிற்கு, இந்த அரிப்புச் சொறியும் சேவை கை கொடுக்கும் தொழிலாக மாறியுள்ளது. “அரிப்பைச் சொறிவது ஒரு முறையான வேலையா?” என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ளும் இவர், அதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது சேவையை சீனா முழுவதும் 100 கடைகளாக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளார். அனைத்துக் கிளைகளிலும் ஒரே சீரான சேவை கிடைப்பதை உறுதிசெய்ய முறையான பயிற்சி, வரையறுக்கப்பட்ட நுட்பங்கள் ஆகியவற்றை உருவாக்கி, இத்துறையில் ஒரு தெளிவான தொழில்முறைத் தரத்தை நிலநாட்ட அவர் தீவிரமாக உழைத்து வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in