“தொகுதிக்குள் நுழஞ்சா கொலை செஞ்சிடுவேன்!”.. தவெக நிர்வாகிக்கு அமைச்சர் பகிரங்க மிரட்டல்?.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆடியோ.. தமிழக அரசியலில் பெரும் புயல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தொகுதிக்குள் நுழஞ்சா கொலை செஞ்சிடுவேன்!”.. தவெக நிர்வாகிக்கு அமைச்சர் பகிரங்க மிரட்டல்?.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆடியோ.. தமிழக அரசியலில் பெரும் புயல்..!!

Published

on

சாத்தூர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி லட்சுமணன், தனது ராஜபாளையம் தொகுதிக்குள் நுழைந்தால் அவரைக் கொலை செய்துவிடுவேன் என அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ உரையாடலில், திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து சமீபத்தில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி ராஜகுருவிடம், அமைச்சர் இது குறித்துக் கடிந்துகொண்டு பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரியின் உதவியாளர் தரப்பில் இருந்து மறுப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனும், அரசியல் ஆதாயத்திற்காகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலி ஆடியோவே இது என்றும், இதில் உண்மை ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in