“எனக்கு ஏன் உதவி கிடைக்கல..?” மகளின் மருத்துவக் கனவு… பொய்த்துப்போன சாகுபடி… கலெக்டரிடம் கேள்வி கேட்டுவிட்டு விபரீத முடிவு எடுத்த விவசாயி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கு ஏன் உதவி கிடைக்கல..?” மகளின் மருத்துவக் கனவு… பொய்த்துப்போன சாகுபடி… கலெக்டரிடம் கேள்வி கேட்டுவிட்டு விபரீத முடிவு எடுத்த விவசாயி..!!

Published

on

மராட்டிய மாநிலத்தில் போர்கோன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது மகளின் மருத்துவக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மராட்டிய மாநிலம் நேன்டட் மாவட்டம் போர்கோன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷங்கர் அபன்ராவ் கிஷிர்சாகர் (வயது 46). இவர் தனது வயலில் சோயாபீன் சாகுபடி செய்திருந்தார். ஆனால் மழை இல்லாததால் சாகுபடி பொய்த்துப் போனது. அவரது மகள் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். சாகுபடி தவறியதற்காக கல்விக்கட்டணத்தை தள்ளுபடி செய்யும் திட்டத்தில் விண்ணப்பித்தார். ஆனால் கட்டண தள்ளுபடி கிடைக்கவில்லை.

Advertisement

இதனால், நிதிச்சுமை அதிகரித்து மனஉளைச்சல் அடைந்த கிஷிர்சாகர் தனது வயலுக்கு சென்றார். தனது நிலைமையை வீடியோவில் பேசி பதிவேற்றம் செய்தார். அதைப்பார்த்து குடும்பத்தினர் அங்கு வருவதற்குள் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனக்கு ஏன் கடன் தள்ளுபடியோ, மகளுக்கு கட்டண தள்ளுபடியோ கிடைக்கவில்லை என்று அவர் கலெக்டருக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in