LATEST NEWS
பகீர்..! “வாங்க சாமி கும்பிட்டு வரலாம்” கணவனை நைசாக அழைத்து சென்று… கள்ளக்காதலனை வரவழைத்து… குழந்தையின் கண் முன்னே மனைவி செய்த அந்த கொடூரம்…!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ் (23) என்ற வாலிபர் அவரது மனைவி ஹாசினி (19) மற்றும் கள்ளக்காதலன் யுகந்தரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரமேஷிற்கு, ஹாசினியுடன் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதோடு, ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ஹாசினி தனது சிறுவயது நண்பரான யுகந்தருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.
கணவரைக் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஹாசினி, ஆன்மீகப் பயணம் என்று கூறி மல்லப்பா கொண்டா மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு ரமேஷை அழைத்துச் சென்றுள்ளார். பயணத்தின்போது தனது லைவ் லொகேஷனை கள்ளக்காதலனுக்குப் பகிர்ந்து வந்த அவர், மலைச் சாலையின் கொண்டை ஊசி வளைவு அருகே திட்டமிட்டுத் தனது கைப்பையைக் கீழே வீசியுள்ளார். பையை எடுப்பதற்காக ரமேஷ் வண்டியை நிறுத்தியபோது, அங்கு மறைந்திருந்த யுகந்தரும் அவனது கூட்டாளிகளும் ரமேஷைக் காட்டுக்குள் துரத்திச் சென்று கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ஹாசினியின் தாய் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹாசினி தனது கணவரை விட்டுவிட்டு வேறு இரண்டு ஆண்களுடன் பைக்கில் தப்பிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மொபைல் சிக்னல் மற்றும் ஜிபிஎஸ் உதவியுடன் ரமேஷின் உடலை மீட்ட போலீசார், ஹாசினி, அவளது காதலன் யுகந்தர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
