CRIME
இவனெல்லாம் ஒரு மனுஷனா.? மகன் தூக்கில் தொங்கிய சில மணி நேரத்தில்… மருமகளைச் சீரழித்த 80 வயது மாமனார்.. நாட்டையே உலுக்கிய கொடூரம்..!!
திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள நூதன்பஜார் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 80 வயது முதியவர் ஒருவர் தனது மருமகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை, அந்த முதியவரின் மகன் தனது வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தனது தந்தையின் தவறான செயலால் மனமுடைந்தே அவர் தற்கொலை செய்து கொண்டார் என ஆத்திரமடைந்த கிராமத்தினர் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த முதியவரே மகனின் மரணத்திற்குக் காரணம் எனக் கருதி கிராம மக்கள் அவரைப் பொதுவெளியில் வைத்து கடுமையாகத் தாக்கினர். மேலும், அவரது கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து, கிராமம் முழுவதும் ஊர்வலமாகக் கூட்டிச் சென்று, அங்கிருந்த ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்தினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நூதன்பஜார் போலிசார், பொதுமக்களிடம் இருந்து முதியவரை மீட்டு சிகிச்சைக்காகப் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். முதியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மனு அளித்துள்ள போதிலும், இதுவரை அதிகாரப்பூர்வமாகப் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், எழுத்துப்பூர்வமான புகார் கிடைத்தவுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
