LATEST NEWS
டெல்லிக்கு ஸ்டாலின் சொன்ன ‘ஸ்ட்ரிக்ட் நோ’… பாஜக-வின் ரகசிய டீலை அதிரடியாக நிராகரித்த திமுக… அறிவாலயத்தில் கசிந்த ரகசியம்..!!!
மத்திய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ‘தொகுதி மறுவரையறை மசோதா 2.0’ விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு திமுக-விடம் பாஜக தலைமை, கனிமொழி எம்பி மூலமாக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தென் மாநிலங்களின் எம்பி இடங்களைக் குறைக்கும் இந்த மசோதாவை எந்த வடிவிலும் ஆதரிக்க முடியாது என்று ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
திமுக-வின் இந்த அதிரடி முடிவில், தவெக அரசு கொடுக்கும் அரசியல் நெருக்கடிகளைச் சமாளிக்க மத்திய பாஜக-வின் ஆதரவு தேவை என்று கருதிய சில இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு உடன்பாடு இல்லை. கொள்கையில் சமரசம் செய்ய முடியாது என்று ஸ்டாலின் இவர்களிடமும் கறாராகக் கூறியதால், அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், திமுக ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகி தனித்து முடிவெடுக்கும் சூழல் உருவாகியுள்ளதால் பாஜக தலைமை நிம்மதியடைந்துள்ளது. இந்த மசோதா விவகாரத்தில் பாஜக-வின் அணுகுமுறை மற்றும் ஸ்டாலினின் எதிர்வினை, தமிழ்நாடு அரசியலில், குறிப்பாகத் தவெக மற்றும் பாஜக-வுடனான திமுக-வின் உறவில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
