“பெரியவரே.. இந்த வயசுல எங்கிருந்து தான் இந்த கான்பிடன்ஸ் வருதோ..?!” 2K கிட்ஸை ஓரங்கட்டிய தாத்தாவின் வெறித்தனமான சாகசம்.. வைரலாகும் மாஸ் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பெரியவரே.. இந்த வயசுல எங்கிருந்து தான் இந்த கான்பிடன்ஸ் வருதோ..?!” 2K கிட்ஸை ஓரங்கட்டிய தாத்தாவின் வெறித்தனமான சாகசம்.. வைரலாகும் மாஸ் வீடியோ..!!

Published

on

60 வயதான முதியவர் ஒருவர், வேகமாக ஓடும் ரயிலின் வாசலில் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் கால்களை அகல விரித்து சாகசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி இளைஞர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த முதியவரின் அசாத்திய தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பார்த்து வியக்கும் இளவட்டங்கள், “பெரியவரே இந்த வயசிலும் உங்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு கான்பிடன்ஸ் வருதோ” என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். வயதான காலத்திலும் அவரது இந்த சுறுசுறுப்பும் உற்சாகமும் பலரைக் கவர்ந்திருந்தாலும், இந்தச் செயல் நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், ஓடும் ரயிலின் படிக்கட்டுகளிலும் வாசல்களிலும் இது போன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது எந்த வயதினராக இருந்தாலும் மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு சிறிய தவறு அல்லது பிடி நழுவினால் கூட அது மரணத்தில் முடியக்கூடிய கொடூர விபத்தாக மாறிவிடும். முதியவரின் உற்சாகத்தைப் பாராட்டினாலும், சமூக வலைத்தளங்களில் கவனத்தைப் பெறுவதற்காக அல்லது தற்பெருமைக்காகத் தனது உயிரையே பணையம் வைத்து இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது முற்றிலும் தவறானது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in